• சற்று முன்

    விவசாயி வீட்டில் நெல்லுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நல்ல பாம்பை பிடித்தனர்.


    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயி இவருடைய மனைவி ஜோதி பாலசுப்பிரமணியன் தனது வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் நெல் சேகரித்து வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரது குழந்தைகள் டிரம்மின் அருகில் விளையாடி கொண்டு இருந்தனர்

    அப்போது டிரம்மில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. உடனே அருகே சென்று பார்த்தபோது டிரம் மூடியின் மேல் பகுதியில் வால் போன்று லேசாக தெரிந்தது. இதையடுத்து ஜோதி மணி டிரம்மை திறந்து பார்த்த போது அதற்குள் நெல்மணிகள் இருந்த பகுதியில் பாம்பு பதுங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகள் பாம்பை கண்டவுடன் பயந்து அலறினர் இதையடுத்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுதீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நெல்லுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நல்ல பாம்பை பிடித்தனர். பாம்பினை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad