பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் பூத் கமிட்டி சேர்ப்பதற்கான மாதிரி விண்ணப்ப வடிவம் வழங்கினார்.வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்துக்கு அதிமுக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா, பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்த தின விழா, மற்றும் கழக 51 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை,எளிய மக்களுக்கு நடைபெறும் சமத்துவ சமுதாய திருமண விழாவில் எனது மகள் பிரியதர்ஷினி மற்றும் மணமகன் முரளி ஆகியோருக்கான திருமண அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை