கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை - போலிஸ்சார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது அதன் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் இரவு இரு சக்கர வாகன காப்பகத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் ஆனந்தராஜின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டன.
ர் இந்நிலையில் காலை இரு சக்கர வாகன காப்பகத்திற்கு வந்த பணியாளர் கொலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தடயங்களை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை