Header Ads

  • சற்று முன்

    சிவகங்கையில், இலக்கிய, இரண்டாவது புத்தகத் திருவிழா:அமைச்சர்:


    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், முன்னிலையில் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்களின் போது,  கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புக்கள் உள்ளது. அதில் கூடுதலாக, சிறப்பு சேர்க்கின்ற வகையில், தற்போது சிவகங்கையில், கடந்தாண்டு வெகு சிறப்பாகவும், பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் வகையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்;து, இவ்வாண்டும் 2-வது புத்தகத் திருவிழாவினை பபாசி நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக தொடங்கியுள்ளார்கள். அதனுடன் இலக்கியத் திருவிழாவும் அரசின் அறிவுரையின்படி இணைந்து நடத்தப்படுகிறது. 

      புத்தகம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும் அடிப்படையாக அமைகிறது. கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் மற்றும் பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தங்களது கடைசி மூச்சின் போதும், புத்தக வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பதை நாம் அறிந்தவையே.  ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதற்கு அடிப்படையாக புத்தகம் அமைகிறது. இதனை படைப்பாளிகள் படைக்கிறார்கள். அதனை பதிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். புத்தகம் வாசிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பதை மாணவ, மாணவியர்கள் கருத்தில் கொண்டு, தங்களது திறன்களின் அடிப்படையில், சிந்தித்து நிறையப் புத்தகங்களை எழுதி தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 

    மேலும், தமிழ்நாடு முதலமைச்சர்,  தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி;களிலும் நூலகங்களை ஏற்படுத்தி, முன்னதாகவுள்ள அந்நூலகங்களை மேம்படுத்தி, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உபயோகம் உள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்களை இடம்பெறச் செய்துள்ளார்கள். கூடுதலாக நூலகங்கள் தேவைப்படும் பகுதிகளிலும் புதிதாக நூலகங்களை அமைத்திடவும் அறிவுறுத்தியுள்ளார்கள். 

     சென்னையில், சர்வதேச அளவிலான புத்தகத் திருவிழாவினை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு, மேலைநாடுகளுக்கு இணையாக 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த பன்னாட்டு பதிக்கப்பகங்களை அப்புத்தகத் திருவிழாவில் இடம்பெறச் செய்து கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக அப்புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்தாண்டில் பெருநகரமான சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.11 கோடி மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, மாவட்ட அளவில் 2-வது இடத்தில்  சிவகங்கையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.3 ½ கோடி மதிப்பீட்டில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது ,நமது மாவட்டத்திற்கு பெருமையானதாகும். தற்போதும் 2-வது முறையாக சிவகங்கையில் இன்றையதினம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவில், 110 அரங்குகள் புத்தகக்கண்காட்சிகளுக்கும். 10 அரங்குகள் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்தும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பண்டைய தமிழர்கள் நாகரித்துடன் வாழ்ந்ததற்கு சான்றாக பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களின் காட்சிப்பொருட்கள் கண்காட்சி இதற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. பெரும்நகரங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாவைவிட அனைத்து வசதிகளையும் இதில் ஏற்படுத்தி, பொழுதுபோக்கு சாதனங்கள், பாரம்பரிய உணவுகள் போன்றவைகளை ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக 2-வது புத்தகத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து, இதில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் கண்டு களிப்பதுடன், எதிர்கால சந்ததியினர்களாகிய தங்களது குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில், அவர்கள் விரும்பும் பல்வேறு வகையான புத்தகங்களை ஒரேஇடத்தில் பெறுவதற்கும் நாம் உறுதுணையாக இருந்திட வேண்டும். என,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், காரைக்குடி  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.இரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள்  கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மா.வீரராகவன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள்  மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை),  லதா அண்ணாத்துரை (மானாமதுரை), சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரபாவதி, சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, சிவகங்கை வட்டாட்சியர் ப.தங்கமணி, தென்னந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் செயலாளர்கள் எஸ்.வைரவன், எஸ்.கே.முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad