மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக - திமுக அரசு செயல்படுகிறது என கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு
பகுதி நேர ஆசிரியர் ள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. என கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39 ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் யோகா போட்டி, சிலம்பாட்ட போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி குழு தலைவர் குருசாமி தலைமையில் பள்ளி தாளாளர் கதிர்வேல் முன்னணியில் முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே வாசகன் எம்பி, முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கபடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கற்பகவல்லி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ 5000 ரூபாய் பரிசு தொகை வழங்கினார்.
பின்னர் தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில் : பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக., அரசு செயல்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக., கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக., தலைமை அறிவித்துள்ளது. அதிமுக., கூட்டணியை ஆதரிக்கக் கூடிய கட்சிகள் உரிய காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுக., ஆட்சி மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய தகுதியை இந்த ஆட்சி பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் எதிர்மறையான ஓட்டுக்கள் அதிகரித்து வருகிறது. அதுவே எங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலன்,பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி, முதுகலை ஆசிரியர்கள் சாந்தி, இந்திரா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,பழனி குமார்,கோபி, கடம்பூர் மாயா துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை