கவர்னர் விருது பெற்ற, மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 2022ம் ஆண்டிற்கான தேர்தல் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியர் மாரிச்செல்வி, சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றிய முருகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆளுநரிடம் விருது பெற்ற தனி வட்டாட்சியர் மாரிச்செல்வி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை சந்தித்து, விருதுகளை வழங்கி வாழ்த்துகள் பெற்றார். ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், தனி வட்டாட்சியருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை