• சற்று முன்

    கோவில்பட்டியில் தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில்வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.


    கோவில்பட்டியில் தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.

    தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்றபதை வலியுறுத்தி தென்மாவட்ட அளவிலான கலைவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1000 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் வகுப்புவாரியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று கோவில்பட்டி லட்சுமி ஆலை பதின்ம பள்ளியும், சாத்தூர் கே.சி.ஏ.டி. பதின்ம பள்ளி ஆகியவை சாம்பியன் வென்றன. கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியர் கிளப், அருப்புகோட்டை எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவை 2-வது இடத்தையும், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் பதின்ம பள்ளி, கயத்தாறு தமிழர் போர்க்கலை சிலம்பம் ஆகியவை 3-வது இடத்தையும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது . தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் எஸ்.சிவசக்திவேல்முருகன்,தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச்செயலாளர் மாரியப்பன், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன் முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும், அணிகளுக்கும் கோப்பைகளை வழங்கி  மேலும், தேசிய அளவிலான யோகா போட்டிகளில் வென்று, சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ஜெயவர்தினிக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். 

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்புராஜ், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மற்றும் முருகன், கோபி,   தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைச் செயலாளர் சூரியநாராயணன், பொருளாளர் சிவசக்திவேல்முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad