கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாய் பாலத்தில் சீவலப்பேரி குடிநீர் மற்றும் கழிவு நீர் கலந்து ஓடுகிறது. மக்கள் அவதி
கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாய் பாலத்தில் சீவலப்பேரி குடிநீர் மற்றும் கழிவு நீர் கலந்து ஓடுகிறது கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் உடனே சரி செய்ய சொல்லி அப்பகுதி மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் மெயின் சாலை மார்க்கெட் ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாய் பாலம் ஓடையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் கோவில்பட்டி பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது கடந்த சில நாட்களாக கால்வாய் பாலம் அடியில் சீவலப்பேரி குடிநீர் பைப் உடைந்து குடிநீர் கழிவு நீர் கலந்து குடிநீர் வீணாக கால்வாய் கலந்து ஓடுகிறது. மேலும் நகராட்சி நிர்வாகத்துக்கும் பின்னர் குடிநீர் வாரியத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர்,எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குடிநீர் கழிவுநீர் கலந்து கொண்டு ஓடியது இதனால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடைந்த குடிநீர் குழாயை சரி சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை