Header Ads

  • சற்று முன்

    நிலக்கோட்டை பகுதிகளில் திருடர்களின் அட்டகாசம்! பொதுமக்கள் பீதி: திருடர்களின் கூடாரமாக திகழும் பாழடைந்த காவலர் குடியிருப்பு!!


    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஈபி காலனி, ஆனந்தன் நகர், புது தெரு போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சைக்கிள் மற்றும் மோட்டார் போன்ற பொருட்களை திருடர்கள் திருடி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் திருடிய பொருட்களை பாழடைந்த காவலர் குடியிருப்பில் பதுக்கி வைப்பது தான். அப்படி பதுக்கி வைத்த சைக்கிள்களை உரிமையாளர்களே வந்து அவ்வப்போது எடுத்துச் செல்வதும் உண்டு.


    நேற்று இரவு சுமார் இரண்டு மணியளவில் ஆனந்தன் நகர் பகுதியில் வசிக்கும் அதிகாரி ஒருவர் வீட்டில் சுவர் ஏறி குதித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர். பாழடைந்த காவலர் குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் எப்பொழுதும் அச்சத்தோடும் பீதியோடும் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது போலீசாருக்கு தகவல் கொடுப்பதும் அப்போது மட்டும் அந்த பிரச்சினைகள் தீர்வதும் மீண்டும் சமூக விரோத செயல்கள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலரும் சமூக ஆர்வலர்கள் சிலரும்  கூறியதாவது; இப்பகுதியில் அதிகளவில் திருட்டு நடைபெறுவது சம்பந்தமாக ஏற்கனவே பல முறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த பாழடைந்த காவலர் குடியிருப்பை இடித்து தரைமட்டம் ஆக்கி அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் பல முறை கோரிக்கையும் விடுத்துள்ளோம். ஆனாலும் தொடர்ந்து திருட்டும் நடந்து வருகிறது, பாழடைந்த காவலர் குடியிருப்பு பகுதியில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது.

    ஆகையால், இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும் திருடர்களின் அட்டகாசத்தை ஒழிக்கும் விதமாகவும் இரவு நேரங்களில் போலீசார் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் மற்றும் கேட்பாரற்று கிடக்கும் காவலர் குடியிருப்பை இடித்து தரைமட்டம் ஆக்கி வேலிகள் அமைத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad