Header Ads

  • சற்று முன்

    திருமண வரம் தரும் அருள்மிகு கோதண்டராமன்


    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அருள்மிகு கோதண்டராமன் ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசையன்று அனுமன் அவதரித்த அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடபடுகிறது.அருள்மிகு கோதண்டராமன் ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யபட்டு மலர்களால் அலங்காரம் செய்து,வடை மாலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. ஆலயத்தின் மூலவர் அருகே அருள்மிகு கோதண்டராமன் ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் குழந்தை வடிவில் தொட்டிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அனுமன் ஜெயந்தியின் அந்நாளில் குழந்தை வரம் வேண்டி தொட்டிலை தாலாட்டுவோருக்கு குழந்தைபாக்கியம் கிடைப்பதாக ஐதீகம். மேலும் புணர் பூசம் நட்சத்திரதன்று அருள்மிகு கோதண்டராமன் சன்னதியில் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணம் விரைந்து நடப்பதாகவும், கல்வி, செல்வம், புத்திர பாக்கியம் வேண்டிய வேண்டுதல்கள் பலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து ஆஞ்சநேயருக்கு சாற்றபட்ட வடை மாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad