பழனி முருகன் கோவிலில் நாளை முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
பழனி முருகன் மலை கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை (25.12.2022) முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்கிறார்
பழனி முருகன் மலை கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும் இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பின்பு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை தற்பொழுது கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது அதையொட்டி நாளை டிசம்பர் 25ஆம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது இதில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற உள்ளது இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்கிறார் இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் அறங்காவலர்கள் ராஜசேகர் சுப்பிரமணி மணிமாறன் சத்யா ஆகியோர் செய்து வருகின்றனர்.
பழனி தாலுகா நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை