• சற்று முன்

    சென்னையில் இந்திய மருத்துவ சங்க மாநாடு இளம் மருத்துவர்களின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பு


    இந்திய மருத்துவர் சங்கத்தின் 77 வது மாநில மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் செந்தமிழ் பாரி பதவி ஏற்றுகொண்டார். இதில் பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் 2022 ஆண்டின் தலைவர் மருத்துவர் பழனிசாமி  இந்திய மருத்துவ சங்கத்தின் இளம் மருத்துவர் அணி மற்றும் மருத்துவ மாணவர்கள் அணியின் பங்களிப்பை பாராட்டினர். மேலும் இளம் மாணவர்கள் சமூக சேவை செய்வதை எண்ணி பெருமைபடுவதாக கூறினர். 

    அதனை தொடர்ந்து மாநட்டில் மருத்துவ மாணவர்களின் மிஷன் என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பாக மருத்துவ சேவை ஆற்றிய இளம் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி இளம் மருத்துவவர்கள் ஏ.எம்.சரண், ஆசிக்ழ் அருண்குமார், மணிகண்டன், பிரசாந்த், அரவிந்த்சாமி,மற்றும் மருத்துவ மாணவர்கள் வம்சி, ஜெல்ப், சோம்நாத்,சுருதி, விஜய், அனு, தீபிகா, ரோஷன் ஆகியோருக்கும் மாநில மருத்துவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.



    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு மருத்துவ ஆராய்சி சார்ந்த கருத்துகளுக்கு விவாதம் நடைபெற்றது. 


    மாநாட்டின் ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த தலைவர்கள் அபுல்காசன், ஜெயலால், என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன், அழகு வெங்கடேசன், பிரகாசம், கார்த்திக் பிரபு, ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மாநாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிகழ்ச்சியில் மருத்துவ துறையில் பணியாற்றிய பல்வேறு சிறந்த மருத்துவருக்கு விருதுகள் வழங்கபட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad