• சற்று முன்

    விருதுநகர் மாவட்டம் பள்ளப்பட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூக்குழி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி குண்டத்தில் பயபக்தியுடன் இறங்கி, பூக்குழி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்குழி நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன், ஸ்ரீசக்தி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad