வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஐடா ஸ்கடர் அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஐடா ஸ்கடர் அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா டாக்டர் ஐடாஸ்கடர் அன்பு கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜி. தவசீலன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் எஸ். பி. சுந்தர் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் .சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஏ .திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார் .டாக்டர் ஐடாஸ்கடர் அன்பு கரங்கள் அறக்கட்டளை செயலாளர் வீ.ரா சேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.ஆர். டி. சுந்தர்ராஜ் ,மற்றும் ஆர். தேவபிரகாசம், ஆகியோரை சிறப்பித்து வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விக்ரம் மாத்யூஸ் நினைவு பரிசு வழங்கினார்.
உடன் வேலூர் ஊரிசு கல்லூரி முதல்வர் நெல்சன் வில்வநாதன், தமிழ்நாடு சட்டமன்ற இணை செயலாளர் கருணாநிதி, ,வீரமாமுனிவர் தமிழ் சங்கத் தலைவர் ஏ .ஆண்ட்ரூஸ் ,பேராசிரியர் இன்ப எழிலன், டி. கே. டி. குமார் அறங்காவலர் டாக்டர் ஐடாஸ்கடர் அன்பு கரங்கள் அறக்கட்டளை, ஆர்தர் சதானந்தம்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .நிகழ்ச்சியின் நிறைவாக டாக்டர் ஐடாஸ்கடர் அன்பு கரங்கள் அறக்கட்டளை பொருளாளர் ரா .தேவபிரகாசம் ,நன்றியுரை ஆற்றினார். வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் விக்ரம் மாத்யூஸ் அவர்கள்,பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
வேலூர் மாவட்ட நிருபர் S. சுதாகர்
கருத்துகள் இல்லை