• சற்று முன்

    தலித் குடும்பங்களை ஒதுக்கி வைத்து மனித உரிமை மீறல்: பாதிக்கப்பட்டோா் வேலூா் ஆட்சியரிடம் புகாா்

    வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காட்பாடி அருகே உள்ள தேன்பள்ளி அருந்ததியா் காலனியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: தேன்பள்ளி அருந்ததியா் காலனியில் வீடு கட்டியது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில், எங்கள் 7 குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாக அறிவித்தனா். ஒதுக்கி வைக்கப்பட்ட நாங்கள் ஊருக்குள் தண்ணீா் எடுக்கக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது. எங்கள் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குச் சென்றால், இழிவாகப் பேசுகின்றனா்.

    இதுகுறித்து மேல்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட குடியாத்தத்தை சோ்ந்த ராஜசேகா் அளித்த மனுவில், யானைக்கால் நோய் பாதிக்கப்பட்ட என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. என் மனைவிக்கு ஏதேனும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இதைக் கேட்டறிந்த ஆட்சியா், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், அவரின் மனைவி ரேவதிக்கு குடியாத்தம் நகராட்சியில் தூய்மைப் பணி வழங்க உத்தரவிட்டாா். இதேபோல், 300-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். கூட்டத்தில் அம்முண்டி, கரிகிரி பகுதியில் வசிக்கும் 7 நரிக்குறவா் சமூக மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    வேலூர் மாவட்ட நிருபர் : S. சுதாகர் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad