வேலூர் மாவட்டம் ,பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் ,பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் அமைச்சுப்பணியாளர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 மாதங்களுக்கான ஊதியம் வழங்காதை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ச.சுரேந்தர்பாபு, பொருளாளர் என்.கார்திகேயன் ஆகியேர் முன்னிலை வகித்து பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில இணை செயலாளருமான மோ.ஜெயசீலன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அ.சீனிவாசன், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், ஜாகடோ ஜியோ மாவட்ட செய்தித்தொடர்பாளர் வாரா, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழக மாநில தணிக்கையாளர் பாண்டியன், நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர ரவிகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் த.பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் பணிமாறுதல் செய்யப்பட்ட மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியம் உடனே வழங்கி கோரியும் ஆயிரமாயிரம் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் என கோரி கோரிக்கை எழுப்பினர். மாவட்ட செயலாளர் ச.சுரேந்தர்பாபு நன்றி உரையாற்றினார்.
வேலூர் மாவட்ட நிருபர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை