அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்பு கோவில்பட்டியில் திமுகவினர் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக கோவில்பட்டி திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பேருந்தில் பயணம் செய்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியன், பீட்டர்,நகர அவைத் தலைவர் முனியசாமி, நகர துணை செயலாளர்கள் காளியப்பன் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், மாரிச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரப்பன், நகர பொருளாளர் இராமமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சுரேஷ், இலவராஜா, வார்டு செயலாளர்கள், பாஸ்கரன், செந்தில், சமுத்திர பாண்டியன், அமலி பிரகாஷ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன், துணை அமைப்பாளர் முகேஷ் (எ) ராசுக்குட்டி, வார்டு பிரதிநிதி திலக்பாபு, செந்தில் குமார், கண்ணண், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை