Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழு கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழு கூட்டம் இன்று சென்னை எழும்பூர் இச்சா மையத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் சிறப்புரையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைமை குழு உறுப்பினர் தோழர் என். எஸ் . பிரதாப் சந்திரன்  எழுதிய ஆண்டைகளின் ஆதிக்க திமிர் அடக்கிய சிங்கம் சி. கே. மாணிக்கம் என்ற நூலை தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பி. லிங்கம் வெளியிட அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் புதுவை ஆ ராமமூர்த்தி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பி. மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் மு . வீரபாண்டியன் நூல் அறிமுக உரை ஆற்றினார்.நூலாசிரியர் என். எஸ். பிரதாப் சந்திரன் அவர்களுக்கு குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி .லதா பொன்னாடை அணிவித்தார். இதில் மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் கீ. சு.குமார், கோவை அசரப் அலி, எஸ். கே. சிவா, நெல்லை சுகுமாரன், லி உதயகுமார், செண்பகம் உள்ளிட்ட மாநில குழு ,மாநில தலைமை குழு, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து மீஞ்சூர் கிருஷ்ணன், இம்தியாஸ் பாட்ஷா, எம். பி. குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடு வட சென்னை மாவட்ட செயலாளர்  V.சுப்பிரமணி, தலைவர் R.M. சந்தோஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad