Header Ads

  • சற்று முன்

    37 ஆவது தேசிய புத்தக கண்காட்சி கோவை காந்திபுரத்தில் துவங்கியது.


    கோவை : இந்த புத்தகக் கண்காட்சியை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் திறந்து வைத்தார். பேராசிரியர் அ. ராமசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. சிவசாமி மற்றும் டாக்டர் என். ஜி. பி. கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குனர் பேராசிரியர் பெ.இரா. முத்துசாமி ஆகியோர் முதல் விற்பனை நூலை பெற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொருளாளர் ப. பா. ரமணி தலைமை தாங்கினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஆர். ரங்கராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாமன்ற உறுப்பினர்கள் எம். டி. மோகன், மல்லிகா புருஷோத்தமன், பிரபா ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் இரா. மணிமேகலை, கே. ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் கோ. ஜெகதீஸ்வரி, பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பெ. கமலா, கோவை டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் சே. தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன கோவை கிளை மேலாளர் எஸ். குணசேகர் நன்றியுரை கூறினார்.

    இந்த புத்தக கண்காட்சியில் வரலாறு இலக்கியம் அறிவியல் சூழலியல் அரசியல் திறனாய்வு வேளாண்மை மருத்துவம் கல்வியியல் மாற்றியம் பெரியாரிய, அம்பேத்கரிய நூல்கள் மற்றும் பொது அறிவு, பாரதியார், பாரதிதாசன், திருக்குறள் போன்ற கவிதை நூல்கள் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி தொடர்ந்து காலை 9:00 மணி முதல் இரவு 9.09 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் வாசகர்களுக்கு 10% வரை கழிவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இந்த புத்தகக் கண்காட்சியை மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad