உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பு செக்கானூரணியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சோழவந்தான் : மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் தலைமை தாங்கினார். உதயநிதி ரசிகர்மன்ற மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் இனிப்புகள் வழங்கினார். அவைத் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் தணிக்கொடி, ஜெயச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் மோகன், முத்துப்பாண்டி, ஒன்றிய பொருளாளர் மொக்கராஜ், விருமாண்டி ,அழகு சுந்தரம், வயக்காட்டு சாமி ,மகாராஜன், சந்தானம், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை