Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராமத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

    கிராம சாவடி மற்றும் கோவிலில் ஆடு,  மாடுகளை கட்டி அசுத்தப்படுத்தி நோய் தொற்று பரவும் அபாயம் -  அருந்ததி இன மக்களுக்கான சுடுகாடு இடிந்து சரிந்ததால் வேதனை.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள காமராஜர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் அருந்ததி இன மக்கள் வசித்து வருகின்றனர் . இங்கு உள்ள பொது கிராம சாவடி மற்றும் பெருமாள் கோவிலில் ஆடு, மாடுகளை கட்டி சிலர் அசுத்தப்படுத்தி வருவதுடன் , நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். மேலும் அருந்ததி இன மக்களுக்கான சுடுகாட்டு மேற்கூரை இடிந்து சரிந்து விழுந்தது . இதனால் அவர்களுக்கு சுடுகாடு இன்றி தவித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு  அடிப்படை வசதிகளான கழிவு நீர் வாய்க்கால், குடிநீர், தெரு விளக்கு இன்றி அவதியுற்று வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர் . இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad