• சற்று முன்

    முதல் பெண் வழக்கறிஞருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மேலவாசல் குடியிருப்பு வாசிகள்

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேளவாசல் குடியிருப்பு பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மதுரை மாநகராட்சியில் தூய்மை காவலர்களாக பணிபுரிந்து வருபவர்கள். 


    மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் இப்பகுதி மக்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் மேலவாசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண் சட்டம் படித்து வழக்கறிஞராகி சென்னையில் வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சிலில் பதிவு செய்து சாதித்துள்ளார். மேலவாசல் குடியிருப்பு பகுதியில் முதல் பெண் வழக்கறிஞர் துர்கா ஆவார். இவர் இன்று காலை சென்னையிலிருந்து ரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது அவரது உறவினர்கள் அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.குறிப்பாக மேலவாசல் பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் பெண் வழக்கறிஞர் துர்காவிற்கு பொன்னாடை போர்த்தி குதிரை மீது அமர்த்தி ஊர்வலம் ஆக மேலவாசல் குடியிருத்த பகுதிக்கு அழைத்து வந்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கிரைம் பிரான்ச் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு வழக்கறிஞர் துர்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad