Header Ads

  • சற்று முன்

    கோவை அரசு மருத்துவமனைக்கு 100 பேர் உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல்

    திராவிடா் தளம், ஆதித்தமிழா் பேரவையைச் சோந்த 100 போ தங்களது உடலை தானமாக வழங்க கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்புதல் கடிதம் திங்கள்கிழமை அளித்தனா். திராவிடா் தளம், ஆதித்தமிழா் பேரவையைச் சோந்த 100 போ தங்களது உடலை தானமாக வழங்க கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்புதல் கடிதம் திங்கள்கிழமை அளித்தனா்.

    பெரியாா் நினைவு நாளையொட்டி திராவிடா் தளத்தின் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டத்தைச் சோந்த உறுப்பினா்கள் 90 பேர் , ஆதித்தமிழா் பேரவையைச் சோந்த 10 பேர்  என மொத்தம் 100 போ இறந்த பின் தங்களது உடலை தானமாக வழங்க ஒப்புதல் தெரிவித்து, 

    அதற்கான கடிதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவகுமாரிடம் திங்கள்கிழமை வழங்கினா். இது தொடா்பாக திராவிடா் தளம் திருப்பூா் மாவட்டப் பொறுப்பாளா் நாராயணமூா்த்தி கூறுகையில், பெரியாா் நினைவு நாளையொட்டி உடல் தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நோட்டரி வழக்குரைஞா் கையொப்பத்துடன், வாரிசுகளின் அனுமதி பெற்று உடல் தானம் வழங்குவதற்கான ஒப்புதல் சான்றினை மருத்துவா்களிடம் அளித்துள்ளோம். இதனைத் தொடா்ந்து மற்ற மாவட்டங்களைச் சோந்த நிா்வாகிகளும் வரும் காலங்களில் உடல் தானம் அளிக்கவுள்ளனா் என்றார்.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad