• சற்று முன்

    சிவகாசியில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய முப்பெரும் விழா


    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தேசிய நுகர்வோர் தினவிழா, 22வது ஆண்டு விழா மற்றும் 2023' புத்தாண்டு காலண்டர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஈஸ்வரி, செயலாளர் வேல்குமார், பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்றனர். 



    முப்பெரும் விழாவில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் விஸ்வநாதன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய காலண்டரை வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது, இந்திய பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச்  சட்டம் இயற்றப்பட்ட நாளை, தேசிய நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுகர்வோர் உரிமைகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எந்தப் பொருட்கள் வாங்கினாலும் அவற்றின் விலைக்கு உரிய பில்லை கேட்டு வாங்க வேண்டும். பில் இல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. பில்லுடன் வாங்கும் பொருட்களுக்குத் தான் எதேனும் பாதிப்பு ஏற்படடால் உரிய நஷ்டஈடு பெறமுடியும். நுகர்வோர் பாதிக்கப்பட்டால் உடனடியாக நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பேசினார். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகப்பு சேவை மைய மாவட்ட மகளிர் அணி தலைவர் மேரி, திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad