கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கலைத் திருவிழா போட்டிகள் கோலாகலம்,
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள், நேற்று வட்டார வாரியாக, கோலாகலமாக துவங்கியது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, கலை திருவிழா போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கவின்கலை, நடனம், நாடகம் என ஆறு பிரிவுகளின் கீழ், 36 போட்டிகளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ், 90 போட்டிகளும் நடக்கின்றன. பள்ளி அளவில், முதல் பரிசு பெற்றவர்களுக்கு, நேற்று வட்டார அளவிலான போட்டிகள் துவங்கின. இப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், தனித்தனியாக, பள்ளிகள், கல்லுாரிகளில் இப்போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், போட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகபட்சம் 90 மாணவர்கள் பங்கேற்றதால், விழா நடக்குமிடம் திருவிழா போல காட்சியளித்தது. பேருந்து வசதியில்லாமல், சிலர் போட்டி நடக்குமிடத்திற்கு தாமதமாக வந்தனர். இப்போட்டிகளில் முதல் பரிசு பெறுவோருக்கு, விரைவில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் என, அதிகாரிகள்தெரிவித்தனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன்
கருத்துகள் இல்லை