அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்காக 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் திருநங்கைகள்
தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிகட்டு போட்டியிலும் தடம் பதிக்கும் எண்ணத்தில் காளை வளர்ப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வீரத்தை ஆண்களும், பெண்களும் மட்டுமல்ல மூன்றாம் பாலித்தவரான நாங்களும் பிரதிபலிப்போம் என்பதை நிருபிக்கும் வகையில் இளைஞர்களுக்கு நிகராக ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு பார்த்து பார்த்து தயார் செய்து வருகின்றனர் மூன்று திருநங்கைகள். தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான காளைகளை வளர்ப்பதில் மதுரை மாவட்டத்தில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வம்காட்டி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் ஜல்லிகட்டு காளைகளை ஆர்வமுடன் வளர்க்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா, அக்சயா, பிரியாமணி உள்ளிட்ட திருநங்கைகள் 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். இதில் நான்கடவுள், அவன்இவன், சினிமாவில் நடித்து பிரபலமாக உள்ள கீர்த்தனா நான்கு வருடங்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை