குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சமநீதி போராளி இ.வெங்கடேசன் 29 வது நினைவேந்தல் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா


இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது என கோவில்பட்டி அருகே விடுதலை சிறுத்தை கட்சி மாநில  துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேச்சு..


தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமநீதி போராளி இ.வெங்கடேசன் 29 வது நினைவேந்தல் மற்றும் பொதுக்கூட்டம்,நலத்திட்ட உதவி வழங்கும் விழா,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி கிராமத்தில் சமூக சேவை அறக்கட்டளை திடலில் வைத்து  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழினியன்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜய் அந்தோணி,ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சி மாநில  துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைவேந்தன், தேவேந்திர குல முன்னேற்ற பேரவை தலைவர் எஸ் ஆர் பாண்டியன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஆகியோர் கலந்துகொண்டு சமநீதி போராளி இ.வெங்கடேசன்  திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு 500 பேர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில்  எழுச்சிபாசறை மாநில துணைசெயலாளர் விமல் வன்னியர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கருத்துரிமை  பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழரசன், நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, கவியரசன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, நவரத் துணைச் செயலாளர் பாண்டிவாளன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கரிசல் சேகர், மாவட்டத் துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன், மக்கள் செய்தி தொடர்பாளர் மனுவேல், கலை இலக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் பிரபாகரன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்  விடுதலை சிறுத்தை கட்சி மாநில  துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, பேசுகையில் :

சாதி ஒழிப்பை முன்னெடுத்து செல்வதுதான் விடுதலை சிறுத்தை இயக்கம் ஆனால் இந்த ஜாதியை வளர்ப்பதற்கு தான் பாஜக,ஆர்எஸ்எஸ் சங்க பரிவாரர் போன்ற அமைப்புகள் தான் முயற்சி செய்து வருகின்றனர்.இதற்கு இறையாய் கொண்டிருக்கிறது அதிமுக இன்றைக்கு அதிமுகவை கூறு போட்டுக் கொண்டிரு க்கிறார்கள்.பேரறிஞர் அண்ணாவின் பேரில் எம்ஜிஆர் இந்த கட்சியை எதற்கு தொடங்கினாரோ அந்தக் கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது.அதே வேலையைத்தான் தமிழகத்தில் செய்கிறது இதை முறியடிக்கின்ற சக்தியாக திமுக உள்ளது இதற்காகத்தான் திமுகவோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்து பயணிக்கிறது இன்றைக்கு இந்த கூட்டணி வலிமையாக இருக்கின்றது பலர் பிரித்தாலும் சூழ்ச்சியை முயற்சிக்கின்றனர் இதற்காகத்தான் தமிழகத்தில் கலவரத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் உருவாக்கி வருகிறது. இதற்கு ஒரு தலைவர் இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை இவர் பேசுவதெல்லாம் பொய் போகிற போக்கில் உலறுகின்ற வேலையை செய்கிறார் இன்றைக்கு ஜாதி சாதியாக பிரிந்து கிடப்பது தான் பாஜகவின் இருப்பு இருக்கின்றது ஜாதி வாரியாக பிரிப்பதின் தான் ஆர்எஸ்எஸின் வெற்றி இருக்கிறது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வருகின்ற தேர்தலில் பாஜக சங்பாரி வார அமைப்புகளை விரட்டியடிக்கின்ற தேவை இருக்கிறது சமூகநீதியை பாதுகாப்பது பாஜகவை விரட்டியடிப்பது தான் பாஜக விரட்டியடிப்பு தான் சமத்துவத்தை பாதுகாப்பது சமத்துவ மின்மை தான் பாஜகவின் அடிப்படைக் கொள்கை என கூறினார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.