Header Ads

  • சற்று முன்

    திருவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு... மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு, வீடுகளை திறக்கச்செய்த ஆட்சியர்


    திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திக்கோயில் பகுதியில், சுமார் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் வசிப்பதற்கான புதியதாக வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழக அரசும், ராம்கோ நிறுவனமும் இணைந்து 12 பசுமை வீடுகளை கட்டி முடித்துள்ளனர். 

    மலைவாழ் மக்கள் புதிய வீடுகளில் குடியேறும் விழா, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, புதிய வீடுகளை மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு திறந்து வைத்தார். ஆட்சியர், தங்களது குழந்தைகளைக் கொண்டு வீடுகளை திறந்து வைத்த நிகழ்ச்சி மலைவாழ் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் ஆரவாரமாக கைகளைத் தட்டி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, மலைவாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. இங்குள்ள மக்கள், தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்று தான் உங்கள் அனைவருக்கும் முன்னேற்றத்தை தரும். தங்களது குழந்தைகள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்கத் தயாராக உள்ளது. அனைவரும் கல்வியில் சிறந்து விழங்க வேண்டும் என்று பேசினார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad