சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் 66வது நினைவு நாள்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை : நாட்டின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த குழுவின் தலைவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாள் எல்லாம் போராடியவர், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர். அவரது 66 ஆவது நினைவு நாளை அடுத்து 6.12.2022 இன்று வடகோவை மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு கழகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. சிவசாமி முன்னிலை வகித்தார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ. அசரப்அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஜே. ஜேம்ஸ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கே. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் பி. முருகன், மாநில குழு உறுப்பினர் பி.சக்திவேல், மாவட்ட பொருளாளர் பி. சற்குணம் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி சந்திரன், மற்றும் பிரபா ரவீந்திரன், மைலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாரதாமணி, கே.எம். செல்வராஜ், யூ. கே. சுப்பிரமணியன், ஆர். பாலகிருஷ்ணன், ப.பா. ரமணி, மத்திய மண்டல செயலாளர் கே. ரவீந்திரன், மேற்கு மண்டல செயலாளர் என். சந்திரன், வடக்கு மண்டல துணைச் செயலாளர் வி. ஆர். பாண்டியன், மத்திய மண்டல துணை செயலாளர் ஏ. பி. மணிபாரதி, குழந்தைவேல், கே.ஆர். குமார், சபாபதி, சி.சுப்பையன், அன்னூர் செல்வராஜ், சி.ஜீவா, ஜே. கலா, ஈ.கே.பூபதி, ஜே.பத்மநாபன், கே.சி. மூர்த்தி, சி.ஏ. வேலுசாமி, பி.எஸ்.என்.எல். பாலசுப்ரமணியம், எஸ். செல்வராஜ், ஜி. ரமேஷ், பி.மகேந்திரன், டி. விஜயன், பி.நஞ்சப்பன், எம்.பரமேஸ்வரன் உள்ளிட்ட பங்கு கொண்டனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன்
கருத்துகள் இல்லை