• சற்று முன்

    சதுரங்க விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற GM R. பிரக்ஞானந்தாவிற்குப் பாராட்டி பரிசளிக்கும் விழா!

    முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றதற்காக செஸ் இளவரசர் ஜி. எம். ஆர். பிரக்ஞானந்தாவை வாழ்த்துவதற்காக,  பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சமீபத்தில்  டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் வழங்கும் -2022  விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதைப் பெற்றமைக்காக நடைபெற்றது.

    விழாவிற்குத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர்  மாண்புமிகு. சிவமெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். மேலும் இவர் சதுரங்கப் போட்டியின் அடையாளமாகத் திகழும் வீரருக்குப் பள்ளியின் மூலம் வழங்கப்படும் ரூபாய் 7 இலட்சம் பரிசுத் தொகையினையும் அவரது பொற்கரங்களால் வழங்கி பாராட்டி பெருமைப் படுத்தினார். சர்வதேச அளவில் அளப்பரிய சாதனை படைத்த மாணவனைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad