கோவில்பட்டியில் புகார் கொடுக்க சென்ற பட்டியல் இன சமூகத்தைச் தரக்குறைவாக பேசிய மகளிர் காவல் நிலைய போலீசார்
கோவில்பட்டியில் புகார் கொடுக்க சென்ற பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவரை உன்னை நாய் அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிடுவேன் மிரட்டிய மகளிர் காவல் நிலைய போலீசார் - சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கந்தன். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிண அறை பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகளுக்கும், அவருடைய கணவருக்கு பிரச்சினை தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கமால் வாயிலில் வைத்து உன்னை நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிடுவேன் என்று கூறி மிரட்டும் தோனியில் பேசியது மட்டுமின்றி, நீதிமன்றம் சென்றால். கூட உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற என்ற பாணியில் பேசி உள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புகார் அளிக்கச் செல்லும் யாரையும் மரியாதையாக நடந்துவதில்வை , அவதூராக பேசி வெளியே அனுப்பி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை