Header Ads

  • சற்று முன்

    மேலூர் அருகே இடத்தகராறு காரணமாக டிராவல்ஸ் அதிபர் வெட்டி படுகொலை...மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை


    மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டி கிராமத்தில், மதுரை அண்ணா நகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சுரேஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (45) கௌசல்யா என்ற மனைவியும் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை எதிரே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மேலூர் அருகே உள்ள சாம்பிராணி பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றை விலைக்கு வாங்கி ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்கு சென்று விவசாயிகளை பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்த தென்னந்தோப்பு வாங்கியதில் இவருக்கும் பக்கத்து இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை தென்னந்தோப்பிற்கு வந்த சுரேஷை கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் வழிமறித்து தாக்கி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்தமேலவளவு போலீசார் தகவல்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நிகழ்வு இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சிவப்பிரசாத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    கோபாலகிருஷ்ணன், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராக ஏற்கனவே பதவி வகித்தவர் என்பதும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் மேலூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad