Header Ads

  • சற்று முன்

    மதுரை அவனியாபுரத்தில் நுற்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவில் நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் பங்ககேற்பு


    மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கும் மதுரை மாநகரின் உட்கட்ட வளர்ச்சி பணிகளில் வணிகர்கள் பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் - நிதியமைச்சர் PTR தியாகராஜன் அவனியாபுரத்தில் நடைபெற்ற நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க  69 வது ஆண்டு விழாவில் நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் துணை மேயர் நாகராஜன் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள நுற்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு நூற்பொருள் வியாபாரை சங்க தலைவர் குத்தாலிங்கம் தலைமை தாங்கினார் செயலாளர் மோகன் மற்றும் துணை தலைவர் தமிழ்செல்வம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார்.

    நுகர் பொருள் ஷாப் மொத்த வியாபாரிகள் 69 ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் வீட்டிஆர் தியாகராஜன் கலந்துகொண்டு கூறும் போதுகுரூப்பில் வியாபாரிகள் சங்கம் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் பொதுநல சேவையாக நான் ஒரு முதல் 500 பேருக்கு இலவச மருத்துவ மனை கட்டி அதில் சேவை புரிந்து வருவது பாராட்ட வேண்டியது நானும் பாராட்டுகிறேன்

    மூன்று நாட்கள் நான் இங்கு நாட்கள் மதுரையில் தங்கி பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அவசர அவசரமாக தற்பொழுது ஒரே நாளில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கு பெற வேண்டி முதலமைச்சர் உத்தரவுபடி செல்ல வேண்டி இருப்பதசென்னையில் பல்வேறு அலுவலகப் பணிகள் காரணமாகவும் அவசரமாக செல்ல வேண்டியது ஒரே நாளில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் உங்களுடன் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை நிகழ்வில் கலந்து கொண்டு என்னுடன் என் நண்பர்களும் வந்திருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முதலில் நுகர்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வைத்துள்ளனர் அதில் மதுரை விமான நிலையம் குறித்தும் கோரிக்கை வைத்துள்ளனர் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் ஆகி பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வர வேண்டிய கோரிக்கை வைத்தனர் இது தொடர்பாக நானும் முதலமைச்சரிடம் பேசி விரைந்து பேசிய நடவடிக்கை ஏற்பாடு செய்கிறேன் மதுரை வளர்ச்சி திட்டங்களில்பத்து ஆண்டுகள் எந்த பணியிலும் நடைபெறவில்லை என குறிப்பிட்டு உள்ளீர்கள் பல்வேறுபல்வேறு திட்டங்களை துரிதப்படுத்தி அவசரப்படுத்தி முதல்வரின் கவனத்துடன் நடவடிக்கை எடுத்து விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    டைட்டில் பார்க் நிறுவனம் போல் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் மதுரைக்கு கொண்டு வந்து வேலை வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது ஜிஎஸ்டி கூட்டம் மூன்று மாதங்களில் நடக்க வேண்டியதுஆறு மாதங்கள் கழித்து நடக்கிறது மேலும் வரும் 2023 ஜூன் மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரை நடைபெற உள்ளதால் மதுரைவர்த்தகர்கள் வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளைஜிஎஸ்டி கூட்டத்தின் மூலம் நிறைவேற்றி செயல்படுத்திட உங்களுக்கு துணை நிற்போம் மேலும் மதுரை மாநகரில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களை மாற்று இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக கூறினீர்கள் ஒரு மாநகரின் வளர்ச்சி பக்கத்துக்கு ஏற்ப மாற்றம் ஏற்படும் போது போக்குவரத்து கூட்ட நெரிசல் தண்ணீர் சாக்கடை குப்பை இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பொதுவாக அரசு உங்களின் கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு சென்று முடிந்த வரையில் வணிகர்களே வர்த்தக நிறுவனங்களை பாதிக்காத வகையில் அரசு பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad