கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொப்பம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.55 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்து பொதுமக்களுக்கு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கிளைச் செயலாளர் கந்தசாமி, சீதாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்லத்தாயி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் காந்தி ராஜ், முருகன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை