சிவகாசி அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் குத்தி, 11 பவுன் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சிராதா (60). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வீட்டுக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், வீட்டில் இருக்கும் டிவியை பழுது பார்ப்பதற்கு வந்திருப்பதாகக்கூறி வீட்டிற்குள் புகுந்துள்ளார். திடீரென்று அந்த ஆசாமி ஜான்சிராதாவை, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் கழுத்தில் குத்திவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டான். பின்னர் கழுத்தில் குத்தப்பட்ட கத்தியுடன் ஜான்சிராதா அலறியதைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை