• சற்று முன்

    சென்னையில் மின்சாரம் தாக்கி 7 மாதமான ஆண் குழந்தை பரிதாப பலி..

    சென்னையில் உள்ள மாதவரம், பால்பண்ணை எம்.எம்.டி.ஏ 87-வது தெருவில் வசித்து வருபவர் சாம்சன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாம்சனின் மனைவி புஷ்பராணி. 

    தம்பதிகளுக்கு 7 மாதமுடைய ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று சாம்சன் வேலைக்கு சென்றுவிடவே, குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது, புஷ்பராணி சமயலறையில் வேலை செய்துகொண்டு இருந்துள்ளார். அச்சமயத்தில் டிவி அருகில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக மின்சாதனத்தை தொட்டு மின்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  மகன் மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த குழந்தையின் உடலை வைத்து பெற்றோர் கதறியழுதது அப் பகுதியே சோகத்திற்கு உள்ளாக்கியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad