கோவை வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு தொடங்கியது 413 பேர் விருப்ப பாடம் தேர்வு.
கோவை வேளாண் பல்கலையில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நேற்று நடந்தது.அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி, ஆன்லைன் வாயிலாக, நவ.,26ம் தேதி கலந்தாய்வு துவங்கியது.இப்பிரிவில், 7,755 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 6,602 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டன.அதில், 1:3 என்ற அடிப்படையில், 1,130 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இதில், ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் பொதுப்பாடப்பிரிவில் படித்த, 395 பேரும், தொழிற்கல்வி பிரிவில், 18 பேர் உட்பட, 413 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பல்கலையில் நடந்தது. தமிழ் வழி பாடம்தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவியருக்கு சேர்க்கை ஆணையை துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார்.அவர் கூறுகையில்,''அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ளும்.
விடுதி கட்டணமாக, 40ஆயிரம் ரூபாய், கல்விக்கட்டணமாக 50 ஆயிரத்து 225 ரூபாய் அரசு வழங்குகிறது. பொதுக்கலந்தாய்வு, 5ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நடக்கிறது. ஜன., முதல் வாரத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவிகளில் இருவர், தமிழ் வழி பாடத்தை தேர்வுசெய்துள்ளனர், என்றார்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன்
கருத்துகள் இல்லை