• சற்று முன்

    வெள்ளலூர் குப்பை கிடங்கில் மேயர் கல்பனா நேரில் ஆய்வு.

    கோவை : போத்தனுார்;வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் இருந்து, சில மாதங்களாக நான்கு கி.மீ., சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன், மாமன்ற கூட்டத்தில் பேசும்போது, ''குப்பை கிடங்கில் மேயர் மற்றும் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் இருந்து பாருங்கள்,'' என, வேதனையோடு குறிப்பிட்டார். பிரச்னையை உணர்ந்த மேயர் கல்பனா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று குப்பை கிடங்கிற்கு வந்தார். பழயை குப்பையை தரம் பிரிக்கும் பகுதிகளை பார்வையிட்ட அவர், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் அஸ்லாம் பாஷா, குணசேகரன், அப்துல்காதர், உதவி கமிஷனர் அண்ணாதுரை, உதவி நிர்வாக பொறியாளர்கள் கருப்பசாமி, செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad