வீடு புகுந்து முதியவரை தாக்கி நகைகளை பறித்து சென்ற 2 பெண்களை கைது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டம் பல்லடம் ரோடு SR லே அவுட் பகுதியில் தேவராஜ் (58) என்பவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 30.11.2022-ஆம் தேதி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத 2 பெண்கள் வீடு புகுந்த தன்னை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டதாகவும், இது சம்பந்தமாக தேவராஜ் நேற்று (1.12.2022) மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில் வீடு புகுந்து கொள்ளையடித்தவர்கள் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த வடிவேல் குமார் என்பவரது மனைவி பவித்ரா தேவி(26) மற்றும் பிரசாந்த் என்பவரது மனைவி விஜயலட்சுமி(24) என்பதும் தெரிய வந்தது. எனவே அவ்விரண்டு எதிரிகளையும் கைது செய்து அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 9 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன்
கருத்துகள் இல்லை