Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே வேம்பாரில் சர்ச் அருகே சுவர் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை போலீசார் குவிப்பு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பார் உள்ள சுப்பிரமணியபுரம் தென்மயிலை நகர் பகுதியில் பாண்டியன்க்கு  சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் அருகே ஆலயம் மற்றும் இந்து கோயில் உள்ளது இதற்கு இடையே உள்ள இந்த இடத்தில் இந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோட்டை சுவர் கட்ட கடந்த 2014 ஆம் ஆண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினர்களுக்கு இடையேமோதல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.


    இதனை அடுத்து இரண்டு கோவில்களுக்கும் இடையே கோட்டை சுவர் கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் பாண்டி என்பவர் இடத்தில்  சுவர்கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனால் அந்த இடத்தில் சுவர் கட்டுவதற்கு ஒரு தரப்பினரிடையே முயற்சி மேற்கொள்ளப்படும் வரும் சூழலில் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் முன்கூட்டியே இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


    விளாத்திகுளம் ஏ எஸ் பி ஸ்ரேயா குப்தா தலைமையில்,ஏ டி எஸ் பி கார்த்திகேயன் கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சசிகுமார், மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன்,ஆகியோர் சமாதான சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் நீதிமன்ற உத்தரவின் படி நிலம் அளக்கப்பட்டு உரிமை உள்ளவரிடம் இனம் ஒப்படைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

    ஏற்கனவே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு இரு தரப்பினிலே மோதிக் கொண்டதால் மீண்டும் பிரச்சினை வராமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் வேம்பார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad