வேலூர் மாவட்டம், வேலூர் பாகாயம் குழந்தை இயேசு ஆலய கலை அரங்கத்தில் நன்றி அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்துமஸ் தின விழா
வேலூர் மாவட்டம், வேலூர் பாகாயம் குழந்தை இயேசு ஆலய கலை அரங்கத்தில் நன்றி அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்துமஸ் தின விழாவினை முன்னிட்டு அன்பின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நன்றி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜோசப் ஆபிரகாம் தலைமையிலும் ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் கவர்னர் ஜே கே என். பழனி முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வேலூர் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.வி .செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சி .எஸ் .ஐ. பேராயர் சர்மா நித்தியானந்தம், வேலூர் மாவட்டம் சமூக சேவை சங்கம் இயக்குனர் எஸ் .ஜேம்ஸ், பாகாயம் பங்குத்தந்தை என் .டி.இருதயராஜ், ஆகியோர் ஆசியுரை வழங்கினர். வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நன்றி அன்னையர்கள்,உறுப்பினர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை