Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே பாம்பு தீண்டி உயிரிழந்த தாய்; சோகத்திலும் கிராம உதவியாளர் தேர்வெழுதிய மகள்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பசுபதி (60). விவசாய வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகள் கனகரத்தினம் (35). இவரது கணவர் இருளப்பன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு வசந்த் (13), திவ்யா (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் 9 மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். கணவரை இழந்த நிலையில் கனகரத்தினம் தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் பசுபதி, வயல் வேலைக்கு சென்றார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை, அங்குள்ளவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இருதினங்களுக்கு முன் அவர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பசுபதி நேற்று முன்தினம் இறந்தார். 

    இந்நிலையில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு  நடந்தது. இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த கனகரத்தினம், தாய் இறந்த நிலையிலும் மனம் தளராமல் தனது குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு  கோவில்பட்டி அருகே கீழஇறால் தனியார் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார். அதன்பிறகு தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். கணவரை இழந்த நிலையில் தாயின் வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வந்த கனகரத்தினம், தற்போது தாயும் பாம்பு கடித்து இறந்த நிலையில் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad