• சற்று முன்

    கோவில்பட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.80 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தொட்டம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கலையரங்கத்தை  திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி  கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை  முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி,அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் செல்வகுமார்,நகர் மன்ற உறுப்பினர் கவியரசன்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, கோபி, தாமோதரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad