தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள பெட்ரோல் பங்கில் ரூபாய் 30,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடித்து மர்ம நபர் தலைமறைவு
தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள பெட்ரோல் பங்கில் ரூபாய் 30,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடித்து மர்ம நபர் தலைமறைவு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு .
மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், டி. புதுப்பட்டி அருகே சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவில், குடிநீர் குடிப்பது போல் உள்ளே புகுந்து, மர்ம நபர் தலையில் தலைப்பாகை கட்டி, பெட்ரோல் பங்கின் அலுவலகத்தினுள் புகுந்து ரூபாய் 30 ஆயிரம் பணமும், அங்குள்ள லேப்டாப் ஒன்றையும் திருடிச் சென்று மாயமாகியுள்ளனர். பெட்ரோல் பங்க் -ன் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் முத்துப்பாண்டி விழித்து பார்த்தபோது, திருடு போனது தெரிய வந்ததையடுத்து , திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இதனிடையே பங்க்- ன் அலுவலகத்தில் உள்ள லாக்கரில் ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் இருந்துள்ளது , லாக்கரை திறக்க முடியாதால் கொள்ளையரிடமிருந்து பணம் தப்பியது மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனிடையே பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையன் தலைப்பாகை கட்டி, உள்ளே புகுந்து திருடும் காட்சி வெளியாகி உள்ளது.இதனை வைத்து திருமங்கலம் தாலுகா போலீசார் கொள்ளையனை வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை