• சற்று முன்

    சுற்றுலாவிற்கு வந்த வெளி நாட்டு தம்பதி விருதுநகர் தபால் நிலையத்தில் கைவரிசை

    ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் - இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் -  ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி வருகிறது .இந்த தபால் அலுவலகத்தில் சரண்யா என்பவர் அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . கடந்த 22 ஆம் தேதி காரில் வந்த ஈரானை சேர்ந்த தம்பதி , தங்களிடம் டாலர் நோட்டு உள்ளதாகவும்,  அதனை இந்திய ரூபாய்களாக மாற்ற வேண்டுமென சரண்யாவிடம் கேட்டபோது,  இங்கு அதற்கான வசதி இல்லை மதுரை தலைமை தபால் நிலையத்திற்கு செல்லுங்கள் எனப் பேசிக்கொண்டிருந்த சரண்யாவின் கவனத்தை திசை திருப்பி பேசிக் கொண்டிருந்தபோது , அந்த நபர் தபால் நிலையத்தில் வைத்திருந்த ரூ.24,800/- பணத்தை  எடுத்துச் சென்றார்.

    அவர்கள் இருவரும் காரில் சென்ற பின்,  சரண்யா டேபிளில் இருந்த பணத்தை காணவில்லை என தெரியவந்து , டி. கல்லுப்பட்டி போலீசிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து டி. கல்லுப்பட்டி போலீசார் தமிழகமெங்கும் உள்ள தபால் நிலையத்திற்கு இத்தகவலை அனுப்பினர் .அதன் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் , இதேபோன்று தம்பதி சென்றபோது அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் தம்பதிகளை கையும் களமாக பிடித்து டி. கல்லுப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதே போன்று அருப்புக்கோட்டையில் உள்ள தபால் அலுவலகத்திலும் ரூ 84,000 /-பணத்தை இதே தம்பதிகள் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.

        போலீஸ் விசாரணையில் இத்தம்பதி, மெடி (Mehdi) (38 ),, மினு (Minoo) (41) எனத் தெரிந்தது மேலும், இவர்கள் ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப் பயண விசா எடுத்து வந்து , டெல்லியில் வாடகை கார் மூலம் இது போன்ற சம்பவங்களை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இது போன்று வெவ்வேறு மாவட்ட தபால் அலுவலகத்திலும் கொள்ளையடித்துள்ளது தெரிய வருவதால் , அவர்களை டி.கல்லுப்பட்டி போலீசார் மற்றும் டிஎஸ்பி இலக்கியா விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad