கோவையில் பழங்கால நாணய கண்காட்சி ஆர்வமுடன் பார்க்க மக்கள்
கோவை ராம்நகர், தனியார் திருமண மண்டபத்தில் ராம்போ ஹாபி சென்டர் சார்பில், பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், பழங்காலப் பொருட்கள், மரச்சாமான்களின் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில், ராஜராஜ சோழன், சோழர்கள் காலத்திய நாணயங்கள், பிரிட்டிஷ் காலத்திய சல்லி முதல், இரண்டு அணா வரையிலான தாமிர நாணயங்கள், இரண்டு அணா முதல் ஒரு ரூபாய் வரையிலான வெள்ளி நாணயங்கள், முகலாயர்கள் காலத்திய நாணயங்கள் இடம்பெற்றிருந்தன.இது தவிர, 100 ஆண்டுகள் பழமையான சிம்னி விளக்குகள், பல்வேறு உலோகப் பாத்திரங்கள், வெளிநாட்டு நாணயங்கள், கரன்சிகள் இடம்பெற்றிருந்தன.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை