• சற்று முன்

    வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் நல சங்கம்கண்டன சார்பில் ஆர்ப்பாட்டம்

    வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் குடிநீர் , மேநீர் தேக்க தொட்டி பவர் பம்ப் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் நல சங்கம் மாநில மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் பணி செய்து வரும் பணியாளர்கள் 10.5.2000 க்கு முன்பு பின்னர் ஓ .எச்.டி. ஆப்ரேட்டர்கள் துப்புரவு பணியாளர் தூய்மை காவலர் பணியாளர்கள் இவர்களின் அனைத்து பணியாளர்களுடைய கோரிக்கையை முன்னிறுத்தி 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்றாததால் இதனை கண்டித்து வேலூர் மாவட்ட கௌரவத் தலைவர் பி .ராஜேந்திரன் வேலூர் மாவட்ட தலைவர் எம் குமரவேல் ஆகியோர் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் கே. கிருஷ்ணமூர்த்தி ,மாவட்ட பொருளாளர் கே. சுகுமாரன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜி. வெங்கடேசன் ஜி .ராஜி ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநில கூட்டமைப்பு தலைவர் எம் .செல்வம் ,கண்டன உரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர்கள் மாநில கூட்டமைப்பு தலைவர்கள் கே .ஜி .ராஜேந்திரன், பி .பி .லட்சுமணன், டி .சாமிதுரை ,வி .பரமசிவம் , ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வேலூர் கணியம்பாடி அணைக்கட்டு குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் காட்பாடி ஒன்றியம் தலைவர்கள், செயலாளர்கள் ,பொருளாளர்கள், மற்றும் மாநில மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad