• சற்று முன்

    கோவையில் கல்லூரி வாசலுக்கு முன் சோதனை போக்குவரத்து போலீசார் முடிவு.

    கோவை : ஹெல்மெட் அணியாத மாணவர்களை பிடிப்பதற்காக, அந்தந்த கல்லுாரி கேட் முன் திடீர் சோதனை நடத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.கோவை மாநகர சாலைகளில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுதலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, அவிநாசி சாலையில் அனைத்து சிக்னல்களிலும், ஒரே நேரத்தில் வாகன தணிக்கை நடத்தப்படுகிறது.

    அடுத்த கட்டமாக, ஒவ்வொரு கல்லுாரி கேட் முன்பாகவும், திடீர் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுகின்றனர். அந்தந்த கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் முன்னிலையில், இந்த சோதனை நடத்தப்படுகிறது.  பீளமேடு மற்றும் ஈச்சனாரியில் உள்ள, இரு கல்லுாரிகள் முன்பாக நடத்தபட்ட சோதனையில் ஹெல்மெட் இல்லாத மாணவர்கள் பலர் பிடிபட்டனர். அவர்களை பற்றிய விவரம், பெற்றோருக்கு போலீசார் மூலமாகவும், கல்லுாரி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.' ஹெல்மெட் இன்றி, தங்கள் மகனை பைக் ஓட்ட அனுமதிக்கக்கூடாது' என்று பெற்றோருக்கு போலீசார் போனில் அறிவுரை கூறுகின்றனர்.மீண்டும் அந்த மாணவர்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர். இந்த அதிரடி நடவடிக்கை வாயிலாக, மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விதிமீறல் குறையும் என்று போலீசார்எதிர்பார்க்கின்றன.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad