ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவ படத்துக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு, மற்றும் சட்டமன்ற அலுவலகம் அருகே உள்ள, முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே
பாண்டவர்மங்கலம், கயத்தார், இனமணியாச்சி, பசுவந்தனை, காமநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா திருவுருவ படத்துக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம், கருப்பசாமி, காந்தி காமாட்சி, நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ், எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் ஆசூர் காளிபாண்டி, அணிவழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, முன்னாள் பொருளாளர் வேல்முருகன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, ராமமூர்த்தி, கோபி, தாமோதரன், பழனிகுமார், சசிகுமார்,ஜெய்சிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை