• சற்று முன்

    மதுரை வலையங்குளம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

    மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா வளையங்குளம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக இன்று காவல்துறை கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை மற்றும் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வளையங்குளம் மும்மூர்த்தி கோவில் அருகே போலீசார் ரோந்து சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஐந்து பேர் தப்பி ஓட தொடங்கினர் அதனை கண்ட போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் மதுரையைச் சேர்ந்த1) கருப்பசாமி, 2) காளீஸ்வரன் 3) லெட்சுமனன், 4) லிங்கப்பெருமாள் மற்றும் 5) சேதுபதி என்ற அஜித்குமார் என்பதும் அவ்வழியாக வருபவரிடம் வழிப்பறி செய்வதற்காகவும், போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. எனவே ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 580 போதை மாத்திரை மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad